செவ்வாய், 8 ஜூன், 2021

                         அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

நல்வழி (Nalvazhi)

வெண்பா : 28


உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்

விளக்கம்:


நாம் உண்ண தேவை நாழி அரிசி சோறு தான், உடுக்க நான்கு முழம், ஆனால் நாம் ஆசைப்படுவது என்பது கோடி விஷயங்கள், மெய்ஞானம் என்ற அகக்கண் இல்லாமல் கிடைப்பதை வைத்து போதும் என்ற மனநிலையில் வாழாமல் வாழும் மனிதரின் வாழ்க்கை மண் கலம் போல் எப்போதும் துன்பமே நிலைக்கும். ஆதலால் இருப்பதை வைத்து கொண்டு வாழும் மன அமைதி வேண்டும்.

Description

All one needs is a plate of food and a length of cloth
But one desires millions of things.
But the life of people who do not realize this
Is brittle like a clay pot and is filled with misery.

ஞாயிறு, 6 ஜூன், 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

நல்வழி (Nalvazhi)

வெண்பா : 27


ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்

விளக்கம்

ஒரு பொருளை வேண்டும் என்று நினைத்தால் அது கிடைக்காமல் வேறு கிடைக்கலாம், அல்லது அது தான் வந்து சேர வேண்டும் என்ற விதி இருந்தால் அது கூட கிடைக்கும், நினைக்காத ஒன்று நமக்கு கிடைத்தாலும் கிடைக்கலாம் எல்லாம் ஈசன் செயல். மனிதர்களின் விருப்பத்தில் ஒன்றும் நடக்காது, இறைவனின் விதிப்படி தான் அனைத்தும் நடக்கும்.

Description

Desiring one thing and getting another instead
Or receiving even the things that is desired for,
Getting something when one is not expecting it
All these are the work of the almighty who rules me.

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

நல்வழி (Nalvazhi)

வெண்பா : 26

            மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை

தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்

விளக்கம்

ஒருவனுக்கு பசி தோன்றிய போது அவனிடத்தில் உள்ள சிறந்த குணங்கள் அனைத்தும் போய்விடும். இதை தான் "பசி வந்தால் பத்தும் பறக்கும்" என்பார்கள். அவை மானம், குலப்பெருமை, கல்வி, வலிமை, அறிவு, பிறருக்கு கொடுக்கும் குணம், தவம், பெருந்தன்மை, தளராத முயற்சி, தேன் போல் பேசும் மங்கையர் மேல் உள்ள ஆசை ஆகிய பத்தும் பறந்து போகும்.

Description

Honour, class, learning, strength, knowledge
Sense of charity, austerity, aspirations, perseverance
Desire for women of sweet talk, all these ten will vanish
Whence one is confronted with hunger.

வெள்ளி, 4 ஜூன், 2021

                     அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

நல்வழி (Nalvazhi)

வெண்பா : 25

                           ஆன முதலில் அதிகம் செலவானால்

மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

விளக்கம்

ஒருவன் தன் வருவாயை விட அதிகம் செலவு செய்தால், அவன் கடன் வாங்கி தன் மானத்தை இழந்து, சொந்த புத்தியை இழந்து போக வேண்டிய சூழல் ஏற்படும் , போகும் திசை எல்லாம் அவனை எல்லாரும் திருடனைப் போல் பாவித்து அவனிடம் பேச தவிர்ப்பர், ஏழு பிறப்புக்கும் தீயவனாய், நல்லவர்களுக்கு ஆகாதவனாய் மாறிவிடுவான். ஆதலால் வருவாய்க்கு அதிகமாக செலவு செய்யக்கூடாது.

Description

If you tend to spend more than what you earn
You will lose your reasoning and the respect of all.
A thief to everybody and a sinner in all your births
Good people will shun you calling you wicked.

                         அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

நல்வழி (Nalvazhi)

வெண்பா : 24


நீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் (;) பாழே
மடக்கொடி இல்லா மனை

விளக்கம்

திருநீரோ, திருமண்ணோ இடாத நெற்றி வீணானதாகும், நெய்யில்லாமல் உண்ணும் உணவு வீணானதாகும்,
நீர் வளம் தரும் ஆறு இல்லாத ஊர் வீணானதாகும், ஒத்த கருத்து உடைய உடன்பிறப்பு இல்லாத உடம்பு வீணானதாகும், நல்ல குணங்கள் உள்ள மனைவி இல்லாத வீடு வீணானதாகும்,

Description

A fore-head without religious mark is a waste,
Food without ghee and country without a river are all waste
A person without other siblings is a waste
Worst of all is a house without a damsel of good character.

வியாழன், 3 ஜூன், 2021

                         அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

நல்வழி (Nalvazhi)

வெண்பா : 23


வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை

விளக்கம்

வழக்காடு மன்றத்தில் (கோர்ட்) பொய் சாட்சி சொல்பவர் வீடு ஒருவருக்கும் பயன் படாமல் போகும், அந்த வீட்டில் வேதாளம் குடிபுகும், வெள்ளை எருக்கம் பூ பூக்கும் , பாதாள மூலி என்னும் கொடிய விஷம் உள்ள கொடி வளரும், மூதேவி போய் வாழ்வாள், பாம்பு குடியேறும். ஆதலால் நியாய அநியாயங்களை அலசி ஒருவரின் பிரச்சனையை தீர்க்க உதவும் வழக்காடு மன்றத்தில் நாம் பொய் சாட்சி சொல்லக்கூடாது.

Description


In the house of those who bear false witness

Demons and snakes will take residence,
Poisonous weeds and creepers will take hold
Illness and bad luck will take over.

புதன், 2 ஜூன், 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

நல்வழி (Nalvazhi)

வெண்பா : 22


பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்

விளக்கம்

அடுத்தவருக்கு துன்பம் விளைவித்து, ஓடி ஓடி பணத்தை தேடும் கேடு கேட்ட மனிதர்களே கேளுங்கள், உங்கள் உயிர் பிரிந்து போகும் வேளையில் பணம் உங்களுடன் வராது, அதை யாரோ அனுபவிப்பார்கள், ஆதலால் உயிர் இருக்கும் போதே பணத்தை நல்ல காரியங்களுக்கு செலவு செய்யுங்கள்.

Description

Oh! Listen, You toil hard to earn your money
Then you bury it so that no one can steal it.
Once your soul has left your body
Who is there left to enjoy that spoils?

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...