அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)
மூதுரை
(MOOTHURAI)
வெண்பா : 20
உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு.
விளக்கம்:
உடன் பிறந்தோர்
மட்டுமே உறவுகள் என்று இருக்க வேண்டாம், உடன் பிறந்தே கொள்ளும் வியாதிகளும் உண்டு, எங்கோ பெரிய மலையில் இருக்கும் மூலிகை செடிகளில்
இருந்து கிடைக்கும் மருந்து நம் நோயை தீர்ப்பது போல, உறவு அல்லாத அன்னியரும் நமக்கு
நன்மை தருபவராக இருக்கக் கூடும்.
Description :
Don't think that own brothers/sisters are real relations; understand
some diseases are born with. Some herbaceous plants are available from high hills
which will cure our disease, so some just known, non-relatives can also benefit
us.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக