சனி, 15 மே, 2021

                            அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

                                                     நல்வழி (Nalvazhi)

வெண்பா : 5


வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமி(ன்) என்றால் போகா - இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்

விளக்கம்:

நாம் மனம் வருந்தி அழைத்தாலும் , நமக்கு என்று இல்லாத பொருள் நமக்கு கிடைக்காது, அது போல் ஒன்றை வேண்டாம் என்று சொன்னாலும் அது நம்மை விட்டு போகாது, அனைத்து காரியங்களும், உறவுகளும் நாம் செய்த பாவம், புண்ணியம் என்ற இரண்டு விசயங்களின் மூலமே அமைகிறது, இதை உணராமல் தினம் தினம் புலம்பி, நெஞ்சம் வருந்துவது மனிதர்களின் இயல்பு.

Description

The things that you desire, you will not get,
The things that you want rid of, will not go away
It is fate, but the nature of mankind is to worry long
till the heart aches and the body suffer .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...