அவ்வையார் நூல்கள் (Avvaiyar
Books)
மூதுரை
(MOOTHURAI)
வெண்பா : 7
நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம்
விளக்கம்:நீரின் அளவு எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவே அல்லிப்பூ வளரும். நாம் கற்ற நூல்களின் அளவே நம் அறிவு. முற்பிறப்பில் நம் முன்னோர் செய்த புண்ணியங்களின் அளவே நாம் இப்போது அனுபவிக்கும் செல்வம். நமது பிறந்த குலத்தின் அளவே நம் குணம்.
Description :
The lily grows as much as the depth
of water. Our knowledge is the number of books we have learned. The wealth we
now enjoy is the same as the good deeds our forefathers did at birth. Our
character is the size of our birth clan.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக