ஔவையார் பாடல்கள்
ஆத்தி சூடி
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் |
உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ்.
82. பூமி திருத்தி உண் |
விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.(அ)விவசாயத்தை வாழ்க்கை தொழிலாகக் கொள்.
83. பெரியாரைத் துணைக் கொள் |
அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்.
84. பேதமை அகற்று |
அறியாமையை போக்கு.
85. பையலோடு இணங்கேல் |
அறிவில்லாத கீழோரோடு கூடித் திரியாதே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக