வெள்ளி, 7 அக்டோபர், 2022

ஔவையார் பாடல்கள்

 

ஔவையார் பாடல்கள்

ஆத்தி சூடி





106. வேண்டி வினை செயேல்

தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.

 

107. வைகறைத் துயில் எழு

நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு.

108. ஒன்னாரைத் தேறேல்

பகைவர்களை நம்பாதே (அல்லது) நட்பு கொள்ளாதே

109. ஓரம் சொல்லேல்

எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு.

                                                ஆத்தி சூடி முற்றிற்று.

 

வியாழன், 6 அக்டோபர், 2022

ஔவையார் பாடல்கள்

 

                            ஔவையார் பாடல்கள்

ஆத்தி சூடி



 

101. வித்தை விரும்பு

 

பல கலைகளை கற்பதில் ஆர்வம்கொள்

 

102. வீடு பெற நில்

முக்தியை பெறுவதற்க்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து.

103. உத்தமனாய் இரு

உயர்ந்த குணங்கள் கொண்டவனாக் வாழு.

104. ஊருடன் கூடி வாழ்

நல்லவை கெட்டவைகளில் ஊராருடன் கலந்து வாழ்.

105. வெட்டெனப் பேசேல்

யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே.

புதன், 5 அக்டோபர், 2022

ஔவையார் பாடல்கள்

 

ஔவையார் பாடல்கள்

ஆத்தி சூடி





96. மை விழியார் மனை அகல்

விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்.

97. மொழிவது அற மொழி

சொல்லப் படும் விஷயத்தை சந்தேகம் நீங்கும் படி சொல்.

98. மோகத்தை முனி

நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு.

99. வல்லமை பேசேல்

உன்னுடைய சாமர்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே.

100. வாது முற்கூறேல்

பெறியோர்கள் இடத்தில் முறன் பட்டு வாதிடாதே.

செவ்வாய், 4 அக்டோபர், 2022

ஔவையார் பாடல்கள்

 

ஔவையார் பாடல்கள்

ஆத்தி சூடி





91. மீதூண் விரும்பேல்

மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.

92. முனைமுகத்து நில்லேல்

எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே.

93 மூர்க்கரோடு இணங்கேல்

மூர்க்க (அல்லது) மூட குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.

94. மெல்லி நல்லாள் தோள் சேர்

பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.

95. மேன் மக்கள் சொல் கேள்

நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.

திங்கள், 3 அக்டோபர், 2022

ஔவையார் பாடல்கள்

 



ஔவையார் பாடல்கள்

ஆத்தி சூடி





86. பொருள்தனைப் போற்றி வாழ்

நீ பெற்ற பொருள் அல்லது செல்வதை பாதுகாத்து வாழ்.

 

87. போர்த் தொழில் புரியேல்

யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாக செய்யாதே.

 

88. மனம் தடுமாறேல்

எதனாலும் மனக்கலக்கம் அடையாதே.

89. மாற்றானுக்கு இடம் கொடேல்

பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.

90. மிகைபடச் சொல்லேல்

சாதாரணமான விஷயத்தை பெரிதாகக் கூறாதே.

ஞாயிறு, 2 அக்டோபர், 2022

ஔவையார் பாடல்கள்

 

ஔவையார் பாடல்கள்

ஆத்தி சூடி

                                                    


81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்

உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ்.

82. பூமி திருத்தி உண்

விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.()விவசாயத்தை வாழ்க்கை தொழிலாகக் கொள்.

83. பெரியாரைத் துணைக் கொள்

அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்.

84. பேதமை அகற்று

அறியாமையை போக்கு.

85. பையலோடு இணங்கேல்

அறிவில்லாத கீழோரோடு கூடித் திரியாதே.

சனி, 1 அக்டோபர், 2022

ஔவையார் பாடல்கள்

 

ஔவையார் பாடல்கள்

ஆத்தி சூடி





76. நோய்க்கு இடம் கொடேல்

நோய்க்கு வாய்ப்பளிக்கும் எந்த செயலையும் செய்யாதே.

 

77. பழிப்பன பகரேல்

மூத்தோர்கள் பழிக்கும் எந்த இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றை பேசாதே.

78. பாம்பொடு பழகேல்

பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.

79. பிழைபடச் சொல்லேல்

குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே.

80. பீடு பெற நில்

பெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்.

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...