அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)
மூதுரை
(MOOTHURAI)
வெண்பா : 24
நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.
விளக்கம்:குளத்தில் பூத்திருக்கும் தாமரையை அன்னப்பறவை சேர்ந்தது போல கற்றவர்களைக் கற்றவர்களே விரும்பிச் சேர்வர். சுடுகாட்டில் பிணத்தைக் காக்கைச் சேர்வது போல, கல்வி அறிவில்லாத மூடரை, மூடர்களே சேர்வர்
Description :
A swan will always have a friendship with the
lotus nesting in the pond likewise an educated will have friendship with such
equal knowledgeable one, on the other hand, a fool (ignorant) will have
friendship with fools, like a crow with a corpse in a crematorium.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக