சனி, 17 செப்டம்பர், 2022

ஔவையார் பாடல்கள்

 

ஔவையார் பாடல்கள்


ஆத்தி
சூடி



6. ஊக்கமது கைவிடேல்

எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.

7. எண் எழுத்து இகழேல்

கணித, இலக்கண நூல்களைத் தினமும் தவறாமல் நன்கு கற்க வேண்டும்.

8. ஏற்பது இகழ்ச்சி

இரந்து வாழ்வது இழிவானது. அதனால் பிறரிடம் யாசிக்கக் கூடாது.

9. ஐயம் இட்டு உண்

உணவு யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.

10. ஒப்புரவு ஒழுகு

உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.

வெள்ளி, 16 செப்டம்பர், 2022

ஔவையார் பாடல்கள்


ஆத்தி
சூடி

 

1. அறஞ் செய விரும்பு

நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.


2. ஆறுவது சினம்

கோபம் (சினம்)  தணிக்கப்பட வேண்டியதாகும்.

3. இயல்வது கரவேல்

உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு மறைக்காமல்  கொடு.


4. ஈவது விலக்கேல்



ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று நீ தடுக்காதே.

5. உடையது விளம்பேல்

உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.


செவ்வாய், 20 ஜூலை, 2021

 

            அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 30

 

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம். 

விளக்கம்:

அறிவுடையோர் யார்? சாகும் வரையில் ஒருவர் கெடுதியையே செய்தாலும், தன்னால் முடிந்த வரையில் அவரைக் காப்பாற்றுபவரே அறிவுடையார் ஆவார். மரம் தான் சாயும் வரையில் தன்னை வெட்டுபவனுக்குக் குளிர்ந்த நிழலைத் தந்து அவன் குற்றத்தை மறைப்பதைப் பாருங்கள். அப்படித்தான் இருக்க வேண்டும்.

Description :

Who are the great/gentle? Even if one does evil until death, the one who saves him as much as he can is great/gentle. Look at the tree covering its guilt by giving a cool shade to the one who cut it until it dies.



திங்கள், 19 ஜூலை, 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 29

 

மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல
உருவும் உயர் குலமும் எல்லாம் - திரு மடந்தை
ஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து
போம் போது அவளோடும் போம்.
விளக்கம்:

 

ஒருவனைச் சூழ்ந்து வாழும் இனிய சுற்றமும், அவனுடைய பெரும் செல்வமும், அவன் அழகும், அவன் குலப் பெருமையும், லக்ஷ்மி கடாக்ஷம்  அவனுடனே இருக்கும் வரையில் தான். அவள் (லக்ஷ்மி கடாக்ஷம்) அகலும் போது இவையனைத்தும் போய் விடும்.

Description :

Happy circle that surrounds a person, his great wealth, his beauty, his clan pride, is as long as Goddess Lakshmi Blessing is with him. All this will go away when she (Lakshmi Kataksham) leaves.



ஞாயிறு, 18 ஜூலை, 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 28

 

சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும்
கந்தம் குறை படாது; ஆதலால் - தம்தம்
தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால்
மனம் சிறியர் ஆவரோ மற்று?
விளக்கம்:

 

சந்தனம், எவ்வளவு தேய்ந்து மெலிந்திருந்தாலும் மணம் குறைவதில்லை.  அதைப் போலவே தாராள குணம் படைத்த அரசர்களும் தன் பொக்கிஷம் குறைந்த காலத்தும் அவர்தான் தாராள குணம் / மனம் மாறுவதில்லை.

 

Description :

Sandalwood, no matter how worn and thin, does not lose its aroma. In the same way, he is the one who is generous and does not change his generosity/mind even when his treasure is low.



 

சனி, 17 ஜூலை, 2021

 

            அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 27

 

கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்.
விளக்கம்:

 

கற்றறிந்தவர் வார்த்தை கற்காதவர்களுக்கு துன்பத்தைத் தரும்.  தர்மம் தீயவர்களைத் அழிக்கும், மெல்லிய வாழைக்கு அதன் கன்று அழிவைத் தரும்.  வாழ்க்கைக்குப் பொருந்தி நடக்காத மனைவி அந்த வீட்டிற்கு அழிவைத் தருவாள்.

Description :

The educated persons with ruling power may cause misery to those who poor. Dharma may destroy the wicked, and the thin banana may damage/destroy its calf. A wife who does not fit into life will destroy the house.



ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...