ஔவையார் பாடல்கள்
ஆத்தி சூடி
41. கொள்ளை விரும்பேல் |
|
பிறர் பொருளை அபகரிக்க நினைக்காதே
42. கோதாட்டு ஒழி |
குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு).
43. கௌவை அகற்று |
வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு.
44. சக்கர நெறி நில் |
அரசன் வகுத்த தர்ம நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் =ஆள்பவர், தலைவர் ).
45. சான்றோர் இனத்திரு |
அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக