வெள்ளி, 25 ஜூன், 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 5

                        அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி

எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா

விளக்கம்:

நீண்டு உயர்ந்த மரங்கள் எல்லாம் உரிய பருவ காலம் இல்லாமல் பழுக்காது.அதுபோல எவ்வளவு  தொடர்ந்து முயன்றாலும் முதிர்ச்சியுறும் உரிய நாள் வராமல் எடுத்த செயல்கள் முழுமை  அடையாது.

Description :

All tall trees do not provide fruits without a proper season. Similarly, no matter how hard you try, the actions taken before the proper time of maturity will not be complete.





வியாழன், 24 ஜூன், 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 4

             அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்

நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்


விளக்கம்:

 

எவ்வளவு சுண்ட காய்ச்சினாலும் பாலின் சுவை குன்றாது. அளவற்று நட்பு பாராட்டினாலும் நண்பராக இருக்க தகுதியற்றவர் நண்பராக மாட்டார். எந்த சூழ்நிலையிலும் மேன்மையான மக்கள் மேன்மையானவர்களே. சங்கு சுட்ட போதிலும் வெண்மை நிறம் மாறாது.

Description :

No matter how much stew is boiled, the taste of the milk does not deteriorate. A person who does not deserve to be a friend will not be a friend despite the immense friendship praise. In any situation superior people are superior. The cone (oyster) does not change the color of whiteness even when burned.





புதன், 23 ஜூன், 2021

          அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 3

     இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்

இன்னா அளவில் இனியவும் - இன்னாத
நாளல்லா நாள் பூத்தநன் மலரும் போலுமே
ஆளில்லா மங்கையர்க்கு அழகு

விளக்கம்:

இளமையில் வறுமையும், இயலாத முதுமையில் செல்வமும் பெற்றால் அது பருவமில்லாத காலங்களில் பூக்கும் பூக்களைப் போன்று பயனற்றது.  அதைப் போல் துணைவனில்லாத பெண்களின் அழகும் வீணே.

 Description :

Poverty in youth and wealth in old age is as useless as flowers that bloom in the off-season. Like that the beauty of a woman without a life partner is useless.







செவ்வாய், 22 ஜூன், 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 2

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர்மேல் எழுத்துக்கு நேர்

விளக்கம்:

நல்லவர் ஒருவருக்கு  நாம்  செய்யும் உதவியானது, கல்லின் மேல் எழுத்தைச் செதுக்குவது போன்றது. அது எவரும் அறியும் வண்ணம் என்றென்றும் நிலைத்திருக்கும்.  மாறாக இரக்கமற்றவருக்கு நாம்  செய்யும் உதவியானது, நீரின் மேல் எழுதும் எழுத்துக்களைப் போன்று பயனின்றி நிலைக்காது போகும்.


Description :

The help we give to a good person is like carving letters on a stone, anyone knows will last forever. Rather the help we render to the ruthless will not be as useless as writing on the water.







திங்கள், 21 ஜூன், 2021

                         அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 1

 நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
'
என்று தருங்கொல்?' எனவேண்டாம் - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.

 விளக்கம்:

 தென்னைக்கு இன்று நீர்விட்டு வளர்த்தால் ஒருநாள் அது வளர்ந்தபின் நமக்கு நன்றிக்கடனாக  இளநீரை கொடுக்கும். அதுபோல இன்று  நாம்  ஒருவருக்கு  செய்யும் உதவிக்கு பலன் என்று கிடைக்குமோ என ஏங்கி இருக்க வேண்டாம். அதற்க்கு பிரதிபலன் ஒருநாள் தானே வந்து சேறும்.

Description :

If we feed by water for coconut tree today, one day when it grows, it will give us tender coconut as a token of gratitude. Likewise, do not be anxious about the benefit of the help we render to someone today, if we wait, one day, we will get back the benefit of our help in some other way.



                         அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

கடவுள் வாழ்த்து

வெண்பா

வாக்கு உண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனிநுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு


விளக்கம்:

நறுமணம் வீசும் பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும், பெரிய தாமரை மலரில் வாசம்செய்யும் லக்ஷ்மியின் கடாக்ஷமும், நோயற்ற வாழ்வும் கிடைக்கும்.

Description :

You can always expect only good words from the mouth. You will get a powerful mind, and you will get the grace-vision of the Goddess (LAKSHMI) who sits on the big lotus flower. All these will happen to one who surrenders the feet of Lord Ganesha.



 

சனி, 19 ஜூன், 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

நல்வழி (Nalvazhi)

வெண்பா : 40


தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்.

விளக்கம்

தெய்வப் புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளும், நான்கு வேதத்தின் முடிவும், அப்பர், சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய மூவர் பாடிய தேவாரமும், மாணிக்க வாசகர் பாடிய திருவாசகமும், திருக்கோவையும், திருமூலர் பாடிய திருமந்திரம் ஆகிய நூல்கள் சொல்லும் பொருள்கள் அனைத்தும் ஒன்று தான் என்று நீ உணர்ந்து கொள்.

Description

The Sacred kural of Thiruvalluvar, the four Vedas,
the sacred hymns of three nayanmars, the works of
Manyvasagar, the words of Thirumoolar all speak of
one thing, the philosophy of the same faith.

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...