வெள்ளி, 16 ஜூலை, 2021

 

                அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 26

 

 மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு.
விளக்கம்:

 

ஒப்பிட்டு பார்க்கும் போது, அரசனை விட, கசடறக்கற்றவனே 1மேலானவன்.  ஏனென்றால், அரசனுக்கு அவன் தேசத்தைத் தவிர வேறெங்கும் சிறப்பு இல்லை.  ஆனால்  கற்றவனுக்கோ அவன் செல்லுமிடமில்லாம் சிறப்பு.

 

Description :

When there is a comparison between a kind and an educated, the educated is superior. The kind has respect only in his kingdom, whereas the educated has respect wherever he goes in the world.



வியாழன், 15 ஜூலை, 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 25

 

நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.
விளக்கம்:

 

தன்னிடம் விஷமிருப்பதை அறிந்து நாகப்பாம்பு மறைந்து வாழும்விஷமில்லாத தண்ணீர்ப் பாம்போ பயமில்லாது எங்கும் வெளியில் திரிந்து கொண்டிருக்கும்அதைப் போலவே நெஞ்சில் குற்றம் உடையவர்களும் அதை மறைத்தே வாழ்ந்து கொண்டிருப்பர், குற்றமில்லாதவர்களோ கபடமின்றி வெளியில் திரிந்து கொண்டிருப்பர்.

 

Description :

A poisonous cobra hiding and staying away, whereas non-toxic sea snakes are wandering anywhere outside. The culprits are living in hiding, but innocent wander outside without hypocrisy.



புதன், 14 ஜூலை, 2021

 

                அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 24

 

நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.
விளக்கம்:

 

குளத்தில் பூத்திருக்கும் தாமரையை அன்னப்பறவை சேர்ந்தது போல கற்றவர்களைக் கற்றவர்களே விரும்பிச் சேர்வர்சுடுகாட்டில் பிணத்தைக் காக்கைச் சேர்வது போல, கல்வி அறிவில்லாத மூடரை, மூடர்களே சேர்வர்

Description :

A swan will always have a friendship with the lotus nesting in the pond likewise an educated will have friendship with such equal knowledgeable one, on the other hand, a fool (ignorant) will have friendship with fools, like a crow with a corpse in a crematorium.




செவ்வாய், 13 ஜூலை, 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 23

 

கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்
பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - வில்பிடித்து
நீர் கிழிய எய்த வடுப் போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம்.

 

விளக்கம்:

 

சிறு வேறுபாடு வந்தாலே தாழ்ந்தோர் பிளந்து போட்டகல்லைப் போலப் பிரிந்து விடுவர்பெரும் சினத்தால் பிரிந்தாலும்பெரியோர், பிளந்த தங்கத்தைப் போல மீண்டும்சேர்ந்து விடுவர்அவர்கள் கோபம், ஒருவர் எய்த அம்பால் நீரில் உண்டான வடுவைப் போன்றதே.

Description :

Even though there is a small crack in the stone pillar, it is impossible to fuse again, likewise, if there is a small difference in opinion, some relationships are not possible for the reunion. Some relationships are like, spilled in gold. They will join again easily.



திங்கள், 12 ஜூலை, 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 22

 

எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே

கருதியவாறு ஆமோ கருமம்? - கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை.

விளக்கம்:

 

மட நெஞ்சே!  என்னதான் திட்டத்தோடு கற்பக மரத்திடம் சென்றாலும், எட்டிக்காயே கிடைத்ததென்றால் அது நம் முன் வினைப் பயனே.  விதியில் எழுதியுள்ளபடிதான் நமக்குக் கிடைக்குமே அல்லாது நாம் நினைப்பதெல்லாமா நடந்து விடும்?

Description :

 Oh, Idiotic mind, don’t expect good only, you will get good or bad based on your fate, no matter of plan and attempts to grab good things.



ஞாயிறு, 11 ஜூலை, 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 21

 

இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும்.

விளக்கம்:

ஒரு மனைவி நல்லவள் என்றால், அந்த வீட்டில் இல்லாத எதுவும் இல்லை. அவள் எல்லாவற்றிலிருந்தும் கணவனுக்கு நன்மை செய்வாள். மறுபுறம் அவள் நல்லவள் இல்லையென்றால் அந்த வீட்டில் எதுவும் இல்லை என்று அர்த்தம். ஆம், கணவர் வசிக்கும் வீடு புலி பதுங்கியிருக்கும் குகை போல இருக்கும்.

Description :

If a wife is good, there is nothing that is not in that home. She will benefit the husband from everything.  On the other hand, if she is not good means that there is nothing in that house at all. Yes, the house where the husband lives will be like a cave where the tiger lurks.



சனி, 10 ஜூலை, 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 20

 

உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு.

விளக்கம்:

 

உடன் பிறந்தோர் மட்டுமே உறவுகள் என்று இருக்க வேண்டாம், உடன் பிறந்தே கொள்ளும் வியாதிகளும் உண்டு,   எங்கோ பெரிய மலையில் இருக்கும் மூலிகை செடிகளில் இருந்து கிடைக்கும் மருந்து நம் நோயை தீர்ப்பது போல, உறவு அல்லாத அன்னியரும் நமக்கு நன்மை தருபவராக இருக்கக் கூடும்.

 

Description :

Don't think that own brothers/sisters are real relations; understand some diseases are born with. Some herbaceous plants are available from high hills which will cure our disease, so some just known, non-relatives can also benefit us.



ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...