திங்கள், 19 ஜூலை, 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 29

 

மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல
உருவும் உயர் குலமும் எல்லாம் - திரு மடந்தை
ஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து
போம் போது அவளோடும் போம்.
விளக்கம்:

 

ஒருவனைச் சூழ்ந்து வாழும் இனிய சுற்றமும், அவனுடைய பெரும் செல்வமும், அவன் அழகும், அவன் குலப் பெருமையும், லக்ஷ்மி கடாக்ஷம்  அவனுடனே இருக்கும் வரையில் தான். அவள் (லக்ஷ்மி கடாக்ஷம்) அகலும் போது இவையனைத்தும் போய் விடும்.

Description :

Happy circle that surrounds a person, his great wealth, his beauty, his clan pride, is as long as Goddess Lakshmi Blessing is with him. All this will go away when she (Lakshmi Kataksham) leaves.



ஞாயிறு, 18 ஜூலை, 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 28

 

சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும்
கந்தம் குறை படாது; ஆதலால் - தம்தம்
தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால்
மனம் சிறியர் ஆவரோ மற்று?
விளக்கம்:

 

சந்தனம், எவ்வளவு தேய்ந்து மெலிந்திருந்தாலும் மணம் குறைவதில்லை.  அதைப் போலவே தாராள குணம் படைத்த அரசர்களும் தன் பொக்கிஷம் குறைந்த காலத்தும் அவர்தான் தாராள குணம் / மனம் மாறுவதில்லை.

 

Description :

Sandalwood, no matter how worn and thin, does not lose its aroma. In the same way, he is the one who is generous and does not change his generosity/mind even when his treasure is low.



 

சனி, 17 ஜூலை, 2021

 

            அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 27

 

கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்.
விளக்கம்:

 

கற்றறிந்தவர் வார்த்தை கற்காதவர்களுக்கு துன்பத்தைத் தரும்.  தர்மம் தீயவர்களைத் அழிக்கும், மெல்லிய வாழைக்கு அதன் கன்று அழிவைத் தரும்.  வாழ்க்கைக்குப் பொருந்தி நடக்காத மனைவி அந்த வீட்டிற்கு அழிவைத் தருவாள்.

Description :

The educated persons with ruling power may cause misery to those who poor. Dharma may destroy the wicked, and the thin banana may damage/destroy its calf. A wife who does not fit into life will destroy the house.



வெள்ளி, 16 ஜூலை, 2021

 

                அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 26

 

 மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு.
விளக்கம்:

 

ஒப்பிட்டு பார்க்கும் போது, அரசனை விட, கசடறக்கற்றவனே 1மேலானவன்.  ஏனென்றால், அரசனுக்கு அவன் தேசத்தைத் தவிர வேறெங்கும் சிறப்பு இல்லை.  ஆனால்  கற்றவனுக்கோ அவன் செல்லுமிடமில்லாம் சிறப்பு.

 

Description :

When there is a comparison between a kind and an educated, the educated is superior. The kind has respect only in his kingdom, whereas the educated has respect wherever he goes in the world.



வியாழன், 15 ஜூலை, 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 25

 

நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.
விளக்கம்:

 

தன்னிடம் விஷமிருப்பதை அறிந்து நாகப்பாம்பு மறைந்து வாழும்விஷமில்லாத தண்ணீர்ப் பாம்போ பயமில்லாது எங்கும் வெளியில் திரிந்து கொண்டிருக்கும்அதைப் போலவே நெஞ்சில் குற்றம் உடையவர்களும் அதை மறைத்தே வாழ்ந்து கொண்டிருப்பர், குற்றமில்லாதவர்களோ கபடமின்றி வெளியில் திரிந்து கொண்டிருப்பர்.

 

Description :

A poisonous cobra hiding and staying away, whereas non-toxic sea snakes are wandering anywhere outside. The culprits are living in hiding, but innocent wander outside without hypocrisy.



புதன், 14 ஜூலை, 2021

 

                அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 24

 

நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.
விளக்கம்:

 

குளத்தில் பூத்திருக்கும் தாமரையை அன்னப்பறவை சேர்ந்தது போல கற்றவர்களைக் கற்றவர்களே விரும்பிச் சேர்வர்சுடுகாட்டில் பிணத்தைக் காக்கைச் சேர்வது போல, கல்வி அறிவில்லாத மூடரை, மூடர்களே சேர்வர்

Description :

A swan will always have a friendship with the lotus nesting in the pond likewise an educated will have friendship with such equal knowledgeable one, on the other hand, a fool (ignorant) will have friendship with fools, like a crow with a corpse in a crematorium.




செவ்வாய், 13 ஜூலை, 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 23

 

கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்
பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - வில்பிடித்து
நீர் கிழிய எய்த வடுப் போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம்.

 

விளக்கம்:

 

சிறு வேறுபாடு வந்தாலே தாழ்ந்தோர் பிளந்து போட்டகல்லைப் போலப் பிரிந்து விடுவர்பெரும் சினத்தால் பிரிந்தாலும்பெரியோர், பிளந்த தங்கத்தைப் போல மீண்டும்சேர்ந்து விடுவர்அவர்கள் கோபம், ஒருவர் எய்த அம்பால் நீரில் உண்டான வடுவைப் போன்றதே.

Description :

Even though there is a small crack in the stone pillar, it is impossible to fuse again, likewise, if there is a small difference in opinion, some relationships are not possible for the reunion. Some relationships are like, spilled in gold. They will join again easily.



ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...