ஔவையார் பாடல்கள்
ஆத்தி சூடி
96. மை விழியார் மனை அகல் |
விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்.
97. மொழிவது அற மொழி |
சொல்லப் படும் விஷயத்தை சந்தேகம் நீங்கும் படி சொல்.
98. மோகத்தை முனி |
நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு.
99. வல்லமை பேசேல் |
உன்னுடைய சாமர்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே.
100. வாது முற்கூறேல் |
பெறியோர்கள் இடத்தில் முறன் பட்டு வாதிடாதே.