வெள்ளி, 30 செப்டம்பர், 2022

ஔவையார் பாடல்கள்

 

ஔவையார் பாடல்கள்

ஆத்தி சூடி




71. நூல் பல கல்

அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி.

72. நெல் பயிர் விளை

நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்.

73. நேர்பட ஒழுகு

ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட.

74. நைவினை நணுகேல்

பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே.

75. நொய்ய உரையேல்

பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.

வியாழன், 29 செப்டம்பர், 2022

ஔவையார் பாடல்கள்

 

ஔவையார் பாடல்கள்

ஆத்தி சூடி

 


66. நன்மை கடைப்பிடி

நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்.

67. நாடு ஒப்பன செய்

நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்.

68. நிலையில் பிரியேல்

உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.

69. நீர் விளையாடேல்

வெள்ளத்தில் ஆபத்தை உணராமல் நீந்தி விளையாடாதே.

70. நுண்மை நுகரேல்

நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே.

புதன், 28 செப்டம்பர், 2022

ஔவையார் பாடல்கள்

 

        ஔவையார் பாடல்கள்

ஆத்தி சூடி

 


61. தெய்வம் இகழேல்

(அல்லது) சான்றோரை கடவுளை பழிக்காதே.

62. தேசத்தோடு ஒத்து வாழ்

ஊராருடன் பகை இல்லாமல் ஒத்து வாழ்.

 

63. தையல் சொல் கேளேல்

மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.

64. தொண்மை மறவேல்

நம்முள் நிலவும் பழமை மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை மறந்துவிடாதே.

65. தோற்பன தொடரேல்

ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடராதே

செவ்வாய், 27 செப்டம்பர், 2022

ஔவையார் பாடல்கள்

 

ஔவையார் பாடல்கள்

ஆத்தி சூடி





56. தானமது விரும்பு

யாசிப்பவர்களுக்கு தானம் செய்.

57. திருமாலுக்கு அடிமை  செய்

நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்.

58. தீவினை அகற்று

பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.

59. துன்பத்திற்கு இடம் கொடேல்

முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.

60. தூக்கி வினை செய்

ஒரு வேளையை முடிப்பதற்க்கான் வழிமுறைகளை நன்கு ஆராயிந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும்.

திங்கள், 26 செப்டம்பர், 2022

ஔவையார் பாடல்கள்

 

ஔவையார் பாடல்கள்



ஆத்தி சூடி

 

51. சேரிடம் அறிந்து சேர்

நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடயவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.

52. சை எனத் திரியேல்

பெரியோர் 'ச்சீ' என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே.

53. சொல் சோர்வு படேல்

பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே.

54. சோம்பித் திரியேல்

முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.


55. தக்கோன் எனத் திரி

பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள். 

ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

ஔவையார் பாடல்கள்

                           ஔவையார் பாடல்கள்

ஆத்தி சூடி

 

46. சித்திரம் பேசேல்

இல்லாதே ஒன்றை இருப்பதுபோல் இட்டுக்கட்டி பேசாதே

 

47. சீர்மை மறவேல்

சீரிய ஒழுக்கத்திற்கு காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.

48. சுளிக்கச் சொல்லேல்

கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்.

49. சூது விரும்பேல்

ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.

50. செய்வன திருந்தச் செய்



செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்.

சனி, 24 செப்டம்பர், 2022

ஔவையார் பாடல்கள்

 

      ஔவையார் பாடல்கள்



ஆத்தி சூடி

 

41. கொள்ளை விரும்பேல்


பிறர் பொருளை அபகரிக்க நினைக்காதே


42. கோதாட்டு ஒழி

 


குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு).

43. கௌவை அகற்று

வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு.

44. சக்கர நெறி நில்

அரசன் வகுத்த தர்ம நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் =ஆள்பவர், தலைவர் ).

45. சான்றோர் இனத்திரு

அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...