ஔவையார் பாடல்கள்
ஆத்தி சூடி
106. வேண்டி வினை செயேல் |
தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.
107. வைகறைத் துயில் எழு |
நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு.
108. ஒன்னாரைத் தேறேல் |
பகைவர்களை நம்பாதே (அல்லது) நட்பு கொள்ளாதே
109. ஓரம் சொல்லேல் |
எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு.
ஆத்தி சூடி முற்றிற்று.