திங்கள், 28 ஜூன், 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 8

 நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம் மிக்க

நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.


விளக்கம்:

நல்லவர்களைக் பார்ப்பது நல்லது, நமக்கு நன்மை பயக்கும் நல்லவர்கள் சொல்லைக் கேட்பதுவும், அவர்கள் குணங்களை மற்றவரிடத்தில் சொல்வதுவும், அவர்களோடு சேர்ந்து இருப்பதுவும் நல்லது.


Description :

It is good to meet good people, it is good to hear the words of good people, it is also good to tell they're good qualities to others, and it is too good staying with them.



ஞாயிறு, 27 ஜூன், 2021

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 7


நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம்
விளக்கம்:

நீரின் அளவு எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவே அல்லிப்பூ வளரும்.  நாம் கற்ற நூல்களின் அளவே நம் அறிவு. முற்பிறப்பில் நம் முன்னோர் செய்த புண்ணியங்களின்  அளவே நாம் இப்போது அனுபவிக்கும் செல்வம்.  நமது பிறந்த குலத்தின் அளவே நம் குணம்.

Description :

The lily grows as much as the depth of water. Our knowledge is the number of books we have learned. The wealth we now enjoy is the same as the good deeds our forefathers did at birth. Our character is the size of our birth clan.



சனி, 26 ஜூன், 2021

                      அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 6

உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ? கல் தூண்
பிளந்து இறுவது அல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்

விளக்கம்:

கல் தூண் பெரிய பாரத்தையும் ஏற்றும்போது  உடையுமே அன்றி தளர்ந்து வளைந்துவிடுவதில்லை. அதுபோல தக்க சமயத்தில் தன் உயிரையும் வழங்கும் தன்மையுள்ளவர் நற்பண்புகளின் மேல் பற்று இல்லாதவரைக் கண்டு பணிவதில்லை

Description :

The stone pillar is not flexible and does not bend when loaded more and more. Like that He who gives his life in due time does not see and obey those who are not obsessed with virtues





வெள்ளி, 25 ஜூன், 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 5

                        அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி

எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா

விளக்கம்:

நீண்டு உயர்ந்த மரங்கள் எல்லாம் உரிய பருவ காலம் இல்லாமல் பழுக்காது.அதுபோல எவ்வளவு  தொடர்ந்து முயன்றாலும் முதிர்ச்சியுறும் உரிய நாள் வராமல் எடுத்த செயல்கள் முழுமை  அடையாது.

Description :

All tall trees do not provide fruits without a proper season. Similarly, no matter how hard you try, the actions taken before the proper time of maturity will not be complete.





வியாழன், 24 ஜூன், 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 4

             அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்

நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்


விளக்கம்:

 

எவ்வளவு சுண்ட காய்ச்சினாலும் பாலின் சுவை குன்றாது. அளவற்று நட்பு பாராட்டினாலும் நண்பராக இருக்க தகுதியற்றவர் நண்பராக மாட்டார். எந்த சூழ்நிலையிலும் மேன்மையான மக்கள் மேன்மையானவர்களே. சங்கு சுட்ட போதிலும் வெண்மை நிறம் மாறாது.

Description :

No matter how much stew is boiled, the taste of the milk does not deteriorate. A person who does not deserve to be a friend will not be a friend despite the immense friendship praise. In any situation superior people are superior. The cone (oyster) does not change the color of whiteness even when burned.





புதன், 23 ஜூன், 2021

          அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 3

     இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்

இன்னா அளவில் இனியவும் - இன்னாத
நாளல்லா நாள் பூத்தநன் மலரும் போலுமே
ஆளில்லா மங்கையர்க்கு அழகு

விளக்கம்:

இளமையில் வறுமையும், இயலாத முதுமையில் செல்வமும் பெற்றால் அது பருவமில்லாத காலங்களில் பூக்கும் பூக்களைப் போன்று பயனற்றது.  அதைப் போல் துணைவனில்லாத பெண்களின் அழகும் வீணே.

 Description :

Poverty in youth and wealth in old age is as useless as flowers that bloom in the off-season. Like that the beauty of a woman without a life partner is useless.







செவ்வாய், 22 ஜூன், 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 2

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர்மேல் எழுத்துக்கு நேர்

விளக்கம்:

நல்லவர் ஒருவருக்கு  நாம்  செய்யும் உதவியானது, கல்லின் மேல் எழுத்தைச் செதுக்குவது போன்றது. அது எவரும் அறியும் வண்ணம் என்றென்றும் நிலைத்திருக்கும்.  மாறாக இரக்கமற்றவருக்கு நாம்  செய்யும் உதவியானது, நீரின் மேல் எழுதும் எழுத்துக்களைப் போன்று பயனின்றி நிலைக்காது போகும்.


Description :

The help we give to a good person is like carving letters on a stone, anyone knows will last forever. Rather the help we render to the ruthless will not be as useless as writing on the water.







ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...