ஔவையார் பாடல்கள்
ஆத்தி சூடி
|
71. நூல் பல கல் |
அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி.
|
72. நெல் பயிர் விளை |
நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்.
|
73. நேர்பட ஒழுகு |
ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட.
|
74. நைவினை நணுகேல் |
பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே.
|
75. நொய்ய உரையேல் |
பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.






