வெள்ளி, 23 செப்டம்பர், 2022

ஔவையார் பாடல்கள்

                                            ஔவையார் பாடல்கள்


ஆத்தி
சூடி

 

36. குணமது கைவிடேல்

நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே.

37. கூடிப்பிரியேல்


நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே.

38. கெடுப்பது ஒழி


பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.

39. கேள்வி முயல்

கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயர்சி செய்.

40. கைவினை கரவேல்

உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.

வியாழன், 22 செப்டம்பர், 2022

ஔவையார் பாடல்கள்

                                         ஔவையார் பாடல்கள்


                        ஆத்தி
சூடி

 

31. அனந்தல் ஆடேல்


தேவைக்கு அதிகமாக (அல்லது) மிகுதியாக துங்காதே.

 

32. கடிவது மற

யாரையும் கோபத்தில் கடிந்து நீ பேசிவிடாதே.

33. காப்பது விரதம்

தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் (அல்லது) பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.

34. கிழமைப் பட வாழ்

உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ.

35. கீழ்மை அகற்று

இழிவான செயல்களை ஒழி (அல்லது) நீக்கு.

புதன், 21 செப்டம்பர், 2022

ஔவையார் பாடல்கள்

                        ஔவையார் பாடல்கள்



ஆத்தி சூடி

 

26. இலவம் பஞ்சில் துயில்

இலவம் பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு.

27. வஞ்சகம் பேசேல்

பிறரை வஞ்சிக்கும் உண்மைக்கு புறம்பான சொற்களை பேசாதே.

28. அழகு அலாதன செயேல்


நல்லவை அல்லாத இழிவான செயல்களை செய்யாதே.

29. இளமையில் கல்

இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை தவறாமல் கற்றுக்கொள்.

30. அரனை மறவேல்

தருமத்தை எப்போதும் மறவாமல் செய்.

செவ்வாய், 20 செப்டம்பர், 2022

ஔவையார் பாடல்கள்

ஔவையார் பாடல்கள்



ஆத்தி சூடி

 

21. நன்றி மறவேல்

ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.

22. பருவத்தே பயிர் செய்

எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே தெளிவாக செய்ய வேண்டும்.

23. மண் பறித்து உண்ணேல்

பிறர் நிலத்தை அபகரித்து அதன் மூலம் உண்டு வாழாதே

 

24. இயல்பு அலாதன செயேல்

நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் நீ செய்யாதே.

25. அரவம்ஆடேல்

பாம்புகளை பிடித்து நீ விளையாடாதே.

 

திங்கள், 19 செப்டம்பர், 2022

ஔவையார் பாடல்கள்

 

                        ஔவையார் பாடல்கள்



ஆத்தி சூடி

 

16. சனி நீராடு

சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும். சனி நீர் என்றால் குளிர்ந்த நீர் என பொருள். எனவே குளிர்ந்த நீரில் குளி எனவும் பொருள்படும்

17. ஞயம் பட உரை


கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாக பேசு.

18. இடம் பட வீடு எடேல்

உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.

19. இணககம்அறிந்து இணங்கு

ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.

20. தந்தை தாய்ப் பேண்

உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.

ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

ஔவையார் பாடல்கள்

 


ஔவையார் பாடல்கள்



ஆத்தி சூடி

 


11.
ஓதுவது ஒழியேல்

நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.

12. ஔவியம் பேசேல்


ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.

13. அஃகஞ் சுருக்கேல்


அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.

14. கண்டு ஒன்று சொல்லேல்


கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே.

15. ஙப் போல்வளை


'
' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்."" என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.



ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...