வெள்ளி, 2 ஜூலை, 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 12

மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது
மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகிவிடும்

விளக்கம்:


தாழம்பூ பெரிய மடல்களை கொண்டிருக்கும். ஆனாலும் அதன்  மணத்தை யாரும்  விரும்புவதில்லை. மகிழம்பூ அளவில் சிறியது, என்றாலும்  அதன் நறுமணம்  எல்லோரையும்  ஈர்க்கும். அதுபோல எவரையும் உடல் அளவைக்கொண்டு மதிப்பிடக்கூடாது. மேலும் கடல் மிகப் பெரியது. அதன் நீர் குளிப்பதற்குக் கூடப் பயன்படாது. அதன் அருகில் தோண்டிய சிறு ஊற்றில் வரும் நீர் பருகுவதற்குக் கூடப் பயன்படும்.

Description :

The Thalampoo has large flaps. Yet no one likes the smell of it. Mahilampoo is small in size, though its aroma attracts everyone. As such no one should be judged by body size. And the sea is huge. Its water is not even used for bathing. It can also be used to drink water from a small well dug nearby.



வியாழன், 1 ஜூலை, 2021

                                         அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 11

 பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி
ஏற்றம் கருமம் செயல்

விளக்கம்:

நமக்கு உணவாக பயன்படுவது நெல்லில் உள்ள அரிசிதான்  என்றாலும்  அதனைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் உமி நீங்கிய அரிசி முளைக்காது. அதுபோல  ஒரு செயலைச் செய்வதற்கு எவ்வளவுதான் பேராற்றல் உடையவராக இருந்தாலும், செயலுக்கு உதவும் கருவிகளை செய்து கொடுக்கும் உதவியாளர்  துணை இல்லாமல் எடுத்த செயல்  நிறைவு பெறாது.

Description :

Although rice is the major part of paddy, it does not germinate unless the husk protects the paddy. That No matter how ambitious one may be to perform an action, the action taken will not be complete without the help of an assistant who will make the tools to help the action.



புதன், 30 ஜூன், 2021

                             அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 10

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை
விளக்கம்:

 உழவர்கள்  நெல்லுக்குப் பாய்ச்சும் நீர் அங்கிருக்கும் புல்லுக்கும் பயனைத் தரும்.  அது போலவே இந்தப் துன்பம் மிக்க உலகில் நல்லவர் ஒருவர்க்காகப் பெய்யும் மழை எல்லாருக்குமே பயனைத் தருகிறது.

Description :

When farmers irrigate the paddy field, grasses are also getting benefits. Just like that in this miserable world, when it rains for the good one the rest of others are getting benefited.



செவ்வாய், 29 ஜூன், 2021

                         அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 9

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது

விளக்கம்:

தீயவர்களை காண்பதும் தீது. சிறப்புகள் அற்ற தீயவர்கள் சொல்வதை கேட்பதும்  தீங்கானது.   தீயவர்களின் குணங்களை உரைப்பதும் தீதே அத்தகைய தீயவர்களோடு சேர்ந்து இணக்கமாக இருப்பதும் மிகவும் தீங்கானது.

 

Description :

It is not good meeting the wicked persons. It is also harmful to listen to the useless words of evil people, it is very harmful to describe the characters of the wicked and it is very very harmful of staying with the wicked.



திங்கள், 28 ஜூன், 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 8

 நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம் மிக்க

நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.


விளக்கம்:

நல்லவர்களைக் பார்ப்பது நல்லது, நமக்கு நன்மை பயக்கும் நல்லவர்கள் சொல்லைக் கேட்பதுவும், அவர்கள் குணங்களை மற்றவரிடத்தில் சொல்வதுவும், அவர்களோடு சேர்ந்து இருப்பதுவும் நல்லது.


Description :

It is good to meet good people, it is good to hear the words of good people, it is also good to tell they're good qualities to others, and it is too good staying with them.



ஞாயிறு, 27 ஜூன், 2021

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 7


நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம்
விளக்கம்:

நீரின் அளவு எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவே அல்லிப்பூ வளரும்.  நாம் கற்ற நூல்களின் அளவே நம் அறிவு. முற்பிறப்பில் நம் முன்னோர் செய்த புண்ணியங்களின்  அளவே நாம் இப்போது அனுபவிக்கும் செல்வம்.  நமது பிறந்த குலத்தின் அளவே நம் குணம்.

Description :

The lily grows as much as the depth of water. Our knowledge is the number of books we have learned. The wealth we now enjoy is the same as the good deeds our forefathers did at birth. Our character is the size of our birth clan.



சனி, 26 ஜூன், 2021

                      அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 6

உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ? கல் தூண்
பிளந்து இறுவது அல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்

விளக்கம்:

கல் தூண் பெரிய பாரத்தையும் ஏற்றும்போது  உடையுமே அன்றி தளர்ந்து வளைந்துவிடுவதில்லை. அதுபோல தக்க சமயத்தில் தன் உயிரையும் வழங்கும் தன்மையுள்ளவர் நற்பண்புகளின் மேல் பற்று இல்லாதவரைக் கண்டு பணிவதில்லை

Description :

The stone pillar is not flexible and does not bend when loaded more and more. Like that He who gives his life in due time does not see and obey those who are not obsessed with virtues





ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...