புதன், 7 ஜூலை, 2021

                                     அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 17

 

அற்ற குளத்தில் அறு நீர்ப்பறவை போல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு

விளக்கம்:

 

நீர் அற்றுப்போன குளத்தை விட்டு நீர்ப்பறவைகள் நீங்கிவிடும். அதுபோலத் துன்பம் வந்த காலத்திலில் விலகிப் போய்விடுபவர் உறவினர் ஆகமாட்டார். நீர் அற்றுப்போனாலும் அந்தக் குளத்தில் கொட்டி, ஆம்பல், நெய்தல் போன்ற பூக்கொடிகள் ஒட்டிக்கொண்டே இருப்பது போலத் துன்பம் வந்த காலத்திலும் துணைநின்று உதவுபவரே உறவுக்காரர் ஆவார்.

 Description :

When the water dries up, the water-birds fly away from the pond. Like that one who does not support at times of distress is not really relative. Even at the time of water had dried up, some flowering plants such as the amber, lily are still sticking with the pond, like that some relative is always being supportive as ever.



செவ்வாய், 6 ஜூலை, 2021

                                  அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 16

 

அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடியிருக்குமாம் கொக்கு
விளக்கம்:

 

நீர் பாயும் தலை மடையில் பல சிறு மீன்கள் ஓடிக் கொண்டிருந்தாலும், கொக்கு வாடியிருப்பதைப் போலக் காத்துக்
கொண்டிருக்கும்எது வரை? தனக்குரிய பெரிய மீன் வரும் வரைஅதைப் போலவே அறிஞர்களின் அடக்கமும்அதைக் கண்டு அவர்களை அலக்ஷ்யம் செய்து வென்று விட நினைக்கக்கூடாது.


Description :

Although there are many small fishes passing over the canal the crane is still waiting. How long? Until the exact one it needed, likewise, Don’t underestimate the scholar's tolerance and silence, they are waiting for their exact chance to achieve.



திங்கள், 5 ஜூலை, 2021

                         அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 15

 

வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி
ஆங்கு அதனுக்க ஆகாரம் ஆனாற்போல பாங்கு அறியா
புல் அறிவாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின் மேல் இட்ட கலம்
விளக்கம்:

மருத்துவன் ஒருவன்  காயம்பட்ட  வேங்கை ஒன்றுக்கு  மருத்துவம் பார்க்கிறான். குணம் பெற்ற வேங்கை, தன் இயல்பான குணத்தால் அந்த மருத்துவனை அடித்துத் தின்றுவிடுகிறது. அதுபோல நற்பண்பு இல்லாத கீழ்மனம்  கொண்ட  ஒருவனுக்கு செய்யும்  உதவியானது  கல்லின் மேல் விழுந்த மற்பாண்டம் போல, செய்த உதவி சின்னாப் பின்னம் ஆகிவிடும்.


Description :

A doctor is treating an injured Leopard. The healed Leopard, by his natural character, beats and eats the doctor. The help rendered to a person who is not virtuous is as similar as dropping a mud-pot on a rock.



ஞாயிறு, 4 ஜூலை, 2021

                                         அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 14

 

கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாக பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலும்
கல்லாதான் கற்ற கவி
விளக்கம்:

 

காட்டில் மயில் ஆடுவதைப் பார்த்த வான்கோழி, தானும் அந்த மயிலாகப் நினைத்துகொண்டு, தன் அழகு இல்லாத சிறகுகளை விரித்து ஆடிவது போன்றது,   கல்வி அறிவு இல்லாத ஒருவன் கற்றறிந்த புலவனை போன்று பாடல் புனைய  நினைப்பது..

 

Description :

The turkey who saw the peacock playing in the forest, thinking of himself as the peacock, turkey spreads his unattractive wings and dances, compared to an uneducated one attempts to write a poem imitating a knowledgeable poet.



சனி, 3 ஜூலை, 2021

                     அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 13

 

 கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்லமரங்கள் - சபை நடுவே
நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய
மாட்டாதவன் நன் மரம்

விளக்கம்:

கிளைகளாக பிரிந்து, கொம்புகளாக விரிந்து, இலைகளை பரப்பி நிற்கும் மரங்கள் நல்ல மரங்கள் அல்ல. பலரும் கூடியிருக்கும் மன்றத்தில் “படித்துச் சொல்” என்று நீட்டிய ஓலையை வாய்விட்டுப் படிக்காமலும், அதில் எழுதப்பட்டுள்ளவற்றின் குறிப்பினை அறிந்துகொள்ள மாட்டாமலும் நிற்பவன்தான் நல்ல மரம்.

Description :

Trees that are with branches, twigs, leaves, flowers, and fruits are not real trees. The one who stands in the forum where many people are gathered and does not able to read aloud and does not know the meaning of what is written in it is the real tree.



வெள்ளி, 2 ஜூலை, 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 12

மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது
மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகிவிடும்

விளக்கம்:


தாழம்பூ பெரிய மடல்களை கொண்டிருக்கும். ஆனாலும் அதன்  மணத்தை யாரும்  விரும்புவதில்லை. மகிழம்பூ அளவில் சிறியது, என்றாலும்  அதன் நறுமணம்  எல்லோரையும்  ஈர்க்கும். அதுபோல எவரையும் உடல் அளவைக்கொண்டு மதிப்பிடக்கூடாது. மேலும் கடல் மிகப் பெரியது. அதன் நீர் குளிப்பதற்குக் கூடப் பயன்படாது. அதன் அருகில் தோண்டிய சிறு ஊற்றில் வரும் நீர் பருகுவதற்குக் கூடப் பயன்படும்.

Description :

The Thalampoo has large flaps. Yet no one likes the smell of it. Mahilampoo is small in size, though its aroma attracts everyone. As such no one should be judged by body size. And the sea is huge. Its water is not even used for bathing. It can also be used to drink water from a small well dug nearby.



வியாழன், 1 ஜூலை, 2021

                                         அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 11

 பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி
ஏற்றம் கருமம் செயல்

விளக்கம்:

நமக்கு உணவாக பயன்படுவது நெல்லில் உள்ள அரிசிதான்  என்றாலும்  அதனைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் உமி நீங்கிய அரிசி முளைக்காது. அதுபோல  ஒரு செயலைச் செய்வதற்கு எவ்வளவுதான் பேராற்றல் உடையவராக இருந்தாலும், செயலுக்கு உதவும் கருவிகளை செய்து கொடுக்கும் உதவியாளர்  துணை இல்லாமல் எடுத்த செயல்  நிறைவு பெறாது.

Description :

Although rice is the major part of paddy, it does not germinate unless the husk protects the paddy. That No matter how ambitious one may be to perform an action, the action taken will not be complete without the help of an assistant who will make the tools to help the action.



ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...